Tuesday, January 4, 2011

பதிவர் தொப்பி தொப்பி.கமல்.மற்றும் பதிவுலக ஆபாசம்

நண்பர் தொப்பி தொப்பி அவர்களே !

சினிமா பற்றி நீங்கள் எழுதிய இடுகையைப் படித்தேன். ஒட்டுமொத்தமாக சினிமா உலகத்தையே குறை கூறி தண்டிக்க வேண்டும் 
என்று எழுதியிருந்தீர்கள். சினிமாத் துறையில் இருக்கும் அடிமட்டத் தொழிலாளியையும் அல்லவா உங்கள் தண்டனை பாதிக்கும். 

நீங்கள் உதாரணமாகக் காட்டிய கமல் அல்லது ஏனைய நட்சத்திரங்கள் எப்படியோ சின்ன விளம்பரப் படத்திலாவது முகத்தைக் காட்டி 
பிழைத்துக் கொள்வார்கள் ஆனால் திரையில் தெரியாத கீழ் நிலை தொழிலாளியின் நிலை என்ன?

அடுத்து நீங்கள் சொல்லிய உதாரணத்தில் கமலையும் சேர்த்தது தப்பு.மற்றவர்கள் எல்லோரும் கடவுளை நம்பும் ஆத்திகர்கள். 
அவர்களுக்கு பகுத்தறிவே இல்லை.அதனால் அவர்கள் பல பேரோடு கூட்டுச் சேர்வது தப்பு.ஆனால் கமல் , கருணாநிதி போன்றவர்கள் 
எவ்வளவு பெரிய பகுத்தறிவு வாதிகள் அவர்கள் எத்தனை பேரோடும் சேர்ந்து வாழலாம். அதுக்குப் பெயர்தான் லிவ்விங் டுகதர். 
அதுபற்றி நமது பதிவுலக பகுத்தறிவு வாதிகளே பக்கம் பக்கமாக எழுதினார்களே நீங்கள் படிக்கவில்லையா?

இந்த சுதந்திர நவீன உலகத்திலே லிவ்விங் டுகதர் தப்பு என்று சொன்னால் பதிவுலகமே உங்களை கேலி செய்யும்.
 
நீங்கள் சினிமாவை கேலி செய்யும் முன் நம் பதிவுலகிலே பகுத்தறிவு வாதிகள் என்று சொல்லிக் கொண்டு லிவ்விங் டுகதருக்கு 
ஆதரவாக பேசுபவர்கள் திருந்த வேண்டும் என்று ஒரு பதிவு போடுவீர்களா?

அடுத்து சினிமாவில் ஆபாசம் காட்டப் படுவதாக சொல்கிறீர்கள். சும்மா இலவசமாக எழுதும் பதிவைக் கூட பிரபலமாக்க 
ஒரு ஏ ஜோக் , தடை செய்யப்பட்ட வீடியோ , பெண்களின் நிர்வாணப் படங்கள் தேவைப் படும் போது கோடிக் கணக்கில் செலவழித்து 
படம் எடுப்பவர்கள் அவ்வாறு ஆபாசங்களை வெளியிடுவதில் என்ன தவறு?

பதிவுகளில் வெளியிடப்படும் ஆபாசத்தோடு ஒப்பிடும் போது படங்களில் வருவதெல்லாம் சர்வ சாதாரணம். 

இப்படி இருக்க நீங்கள் சினிமாவைக் குறை சொல்லும் முன் ஒருமுறை நம் பதிவர்களையும் குறை சொன்னால் நன்றாக இருக்கும். 
ஆனால் அவ்வாறு எழுதினால் நீங்கள் பல எதிரிகளை சந்திக்க வேண்டி வரும் என்பதை கருதிக் கொண்டு எழுதுங்கள். ஏனெறால் 
அவர்களும் ஏ  ஜோக்குக்காகவே ஏங்கிக் கொண்டு அவர்களுக்கு ஜால்ரா போடும் கூட்டமே உள்ளது.

9 comments:

THOPPITHOPPI said...

//சினிமாத் துறையில் இருக்கும் அடிமட்டத் தொழிலாளியையும் அல்லவா உங்கள் தண்டனை பாதிக்கும். //

ஆயிரம் தொழிலாளிகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக கோடி மக்கள் வாழ்க்கை சீரவழிவதில் உங்களுக்கு சம்மதமா.

கடந்த ஆட்சியில் லாட்டரி சீட்டு தமிழகத்தில் தடை செய்த போது வரவேற்றவர்கள் தானே நாம். ஆனால் அதில் பாதிக்கப்பட்ட ஊனமுற்றோர், முதியவர்கள் பற்றி சிந்தித்தீர்களா? அப்படி இருக்கும்போது சமுதாயத்தை சீரழிக்கும் ஒரு கூட்டத்தில் இருக்கும் அடிமட்டத் தொழிலாளியை மட்டும் கருத்தில் கொள்வது ஏன்? சினிமா என்றால் பூதாகரமா கண்ணில் படுகிறது.


திருடுபவனும் அடிமட்டத்தில் இருப்பவன்தான் அதற்காக திருட்டை ஒழிக்க நடவடிக்கை எடுக்காமல் இருந்து விடலாமா?

THOPPITHOPPI said...

//அடுத்து நீங்கள் சொல்லிய உதாரணத்தில் கமலையும் சேர்த்தது தப்பு.மற்றவர்கள் எல்லோரும் கடவுளை நம்பும் ஆத்திகர்கள்.
அவர்களுக்கு பகுத்தறிவே இல்லை.அதனால் அவர்கள் பல பேரோடு கூட்டுச் சேர்வது தப்பு//

செலவுக்கு மீறி
பணம் இருப்பவனுக்கும், பிறப்பிலேயே விரும்பியது எல்லாம் கிடைத்தவனுக்கு மட்டும்தான் கடவுள் இல்லை.

THOPPITHOPPI said...

//அதுக்குப் பெயர்தான் லிவ்விங் டுகதர்.
அதுபற்றி நமது பதிவுலக பகுத்தறிவு வாதிகளே பக்கம் பக்கமாக எழுதினார்களே நீங்கள் படிக்கவில்லையா?//

இப்படி கண்மூடித்தனமாக எதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

"லிவ்விங் டுகதர்" - ஆணும் ஆணும் பேசிக்கொள்ளும்போது இதில் சுவாரஸ்யம் மட்டும்தான் இருக்கும். நாளை உங்கள் மனைவி உங்களிடம் இதைப்பற்றி பேசினால் அப்படி என்றால் என்ன என்று அப்போது உங்களுக்கு புரியும்.

லிவ்விங் டுகதர்- அரிப்பெடுத்து சுத்துபவர்களுக்கு மட்டும்.

THOPPITHOPPI said...

//இந்த சுதந்திர நவீன உலகத்திலே லிவ்விங் டுகதர் தப்பு என்று சொன்னால் பதிவுலகமே உங்களை கேலி செய்யும்.//

என்னை கேலி செய்பவனை நாளை அவனது உறவினர்கள் கேலி செய்யும்போது விளக்கட்டும்.

THOPPITHOPPI said...

//இப்படி இருக்க நீங்கள் சினிமாவைக் குறை சொல்லும் முன் ஒருமுறை நம் பதிவர்களையும் குறை சொன்னால் நன்றாக இருக்கும்.//

பதிவை சரியாக படித்துவிட்டு எதிர்ப்பதிவு போடவும்.

THOPPITHOPPI said...

ஏனைய கேள்விகளுக்கு நான் பதில் சொல்லவே தேவை இல்லை படிப்பவர்களே தேவையில்லாத கேள்வி என்று புரிந்துக்கொள்வார்கள்.

எதிர்ப்பதிவு எழுதும் நேரத்தில் மக்களுக்கு பயனுள்ள பதிவு ஏதேனும் எழுத முயற்சி செய்யவும். உங்கள் வாழ்க்கையில் நடந்த ஏமாற்றம், தோல்வி, வெற்றி ஏதாவது ஒன்றை பற்றி எழுதுங்கள் நிச்சயம் யாருக்காவது பயன்படும்.

தனியன் said...

அதென்னங்க நியாயம்? சினிமாவில் ஆபாசத்தைக் காட்டினால் அநியாயம் ஆனால் பதிவிலே ஆபாசத்தைக் காட்டினால் நியாயமோ?
அதுசரி சினிமாவைப் பற்றி எழுதினால் யாரும் கேள்வி கேட்காமலே பேமஸாகி விடலாம் ஆனால் பதிவுகளில் உள்ள ஆபாசத்தை எழுதினால்
பிரபல பதிவர்களின் எதிர்ப்பு வரும் என்று பயமா பக்தியா? வாழ்க உங்கள் நியாயம்.

THOPPITHOPPI said...
This comment has been removed by the author.
தனியன் said...

அப்ப ஏ ஜோக் என்ற பெயரில் வக்கிரமாக எழுதுவது கேவலமான படங்கள் போடுவதெல்லாம் தப்பு இல்லை என்றா சொல்கிறீர்கள்?