Friday, August 13, 2010

குறிப்பாக வால்பையன் ,தமிழ் ஓவியா , வினவு நண்பர்களுக்கு இந்தச் சவால்....

கடவுள் மீது குறை சொல்வேன்பது ஒரு பேஷன்.
கடவுள் மீது பைத்தியமாக இருப்பதும் ஒரு பேஷன்தான்.

ஊர் மூலையில் சாப்பாட்டிற்கே அல்லற்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு சாமியார் உண்மையில் கடவுள் மீது அதிக அர்ப்பணிப்புக் கொண்டவராக இருக்கலாம்.ஆனாலும் அவரைவிட நுனிநாக்கு ஆங்கிலம் பேசும் , ஊடகங்களில் வலம்வரும் எல்லோரும் அறிந்த சாமியார் தன வீட்டிற்கு வருவதே தமக்கு விமோசனம் தரும் என்று சொல்வது பக்தியா அல்லது தங்களை சமூகத்தில் உயர்த்திக் காட்டுவதற்கான உக்தியா என்று அடிக்கடி நான் குழம்பிப் போவதுண்டு.
சிலவேளை அது ஒரு பேஷனாகும் இருக்கலாம்!

கடவுளை எதிர்ப்பது அதைவிட விநோதமாக இருக்கும். வலைத்தளங்கலிலே இப்போது கடவுள் நம்பிக்கை என்பதே மூட நம்பிக்கை ,கடவுளை நம்புவர்கள் எல்லோரும் முட்டாள் என்று நிறையப் பேர் எழுதுகிறார்கள்.
இதுவும் ஒரு பேஷன்தான்......

உண்மையில் இது ஒரு நல்ல உக்தி.
அதாவது கடவுள் நம்பிக்கை என்பது மூட நம்பிக்கை என்று நம்புவர்களைஎல்லாம் முட்டாளாக எழுதும்போது தாங்கள் அறிவாளிகளாக வெளிக்காட்டப்படுவதில் அவர்களுக்கு ஒரு வரட்டுச் சந்தோசம்.

எனக்கு ஒரு சின்னச் சந்தேகம் ,இப்படி கடவுள் நம்பிக்கைக்கு எதிராக எழுதும் நண்பர்களிடம் ஒரு சின்ன கேள்வி , உங்கள் குடும்பத்தில் உள்ள ஒருவரோ அல்லது நீங்களோ கடவுளாவது மண்ணாங்கட்டியாவது என்று சொல்லி கடவுள் சந்நிதானத்தில் தாலியோ அல்லது மோதிரமோ மாற்றிக் கொள்ளாமல் திருமணம் செய்துள்ளீர்களா?

எனக்குத் தெரிந்தவரையில் யாரும் இல்லை இல்லை இல்லை........

யாரும் நான் அவ்வாறுதான் மணமுடித்தேன் என்று சொன்னால் அது பொய் என்று கடவுள் சந்நிதானத்தில் அடித்துச் சத்தியம் செய்ய நான் தயார். அவர்கள் தயாரா?


Tuesday, August 10, 2010

யதார்த்த முரண்பாடு

எனக்கு எது பிடிக்கிறதோ அதை மட்டுமே நான் செய்வேன்.யாரும் என்னை மாற்ற முடியாது.
இப்படி சொல்லிக் கொண்டே மற்றவர்களில் குறைசொல்லும் விமர்சகர்களில் நானும் ஒருவன்
அது ஒரு தவறு என்று நான் நினைக்கவில்லை.
யார் சொல்லியும் நான் திருந்தமாட்டேன் என்று இறுமாப்புக் கொள்ளுவது என்னை ஒரு பெரிய மனிதனாக காட்டிக் கொள்ளவே!
அதைப்போலவே மற்றவர்களில்  குறை கண்டுபிடிப்பதும் என்னை பெரிய மனிதனாக காட்டிக் கொள்ளவே!
ஆக இரண்டும் வேறு வேறல்ல.
யார் சொல்லியும் நான் திருந்தமாட்டேன் என்று சொல்லிக்கொண்டு என்னைத் திருந்து என்று சொல்கிறாய் என்று குறை கூறாமல் நீங்களும் என்னைப் போலவே மாறி விடுங்கள்.

இங்கே நான் என்பது சத்தியமாக நான் இல்லை!