Friday, August 13, 2010

குறிப்பாக வால்பையன் ,தமிழ் ஓவியா , வினவு நண்பர்களுக்கு இந்தச் சவால்....

கடவுள் மீது குறை சொல்வேன்பது ஒரு பேஷன்.
கடவுள் மீது பைத்தியமாக இருப்பதும் ஒரு பேஷன்தான்.

ஊர் மூலையில் சாப்பாட்டிற்கே அல்லற்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு சாமியார் உண்மையில் கடவுள் மீது அதிக அர்ப்பணிப்புக் கொண்டவராக இருக்கலாம்.ஆனாலும் அவரைவிட நுனிநாக்கு ஆங்கிலம் பேசும் , ஊடகங்களில் வலம்வரும் எல்லோரும் அறிந்த சாமியார் தன வீட்டிற்கு வருவதே தமக்கு விமோசனம் தரும் என்று சொல்வது பக்தியா அல்லது தங்களை சமூகத்தில் உயர்த்திக் காட்டுவதற்கான உக்தியா என்று அடிக்கடி நான் குழம்பிப் போவதுண்டு.
சிலவேளை அது ஒரு பேஷனாகும் இருக்கலாம்!

கடவுளை எதிர்ப்பது அதைவிட விநோதமாக இருக்கும். வலைத்தளங்கலிலே இப்போது கடவுள் நம்பிக்கை என்பதே மூட நம்பிக்கை ,கடவுளை நம்புவர்கள் எல்லோரும் முட்டாள் என்று நிறையப் பேர் எழுதுகிறார்கள்.
இதுவும் ஒரு பேஷன்தான்......

உண்மையில் இது ஒரு நல்ல உக்தி.
அதாவது கடவுள் நம்பிக்கை என்பது மூட நம்பிக்கை என்று நம்புவர்களைஎல்லாம் முட்டாளாக எழுதும்போது தாங்கள் அறிவாளிகளாக வெளிக்காட்டப்படுவதில் அவர்களுக்கு ஒரு வரட்டுச் சந்தோசம்.

எனக்கு ஒரு சின்னச் சந்தேகம் ,இப்படி கடவுள் நம்பிக்கைக்கு எதிராக எழுதும் நண்பர்களிடம் ஒரு சின்ன கேள்வி , உங்கள் குடும்பத்தில் உள்ள ஒருவரோ அல்லது நீங்களோ கடவுளாவது மண்ணாங்கட்டியாவது என்று சொல்லி கடவுள் சந்நிதானத்தில் தாலியோ அல்லது மோதிரமோ மாற்றிக் கொள்ளாமல் திருமணம் செய்துள்ளீர்களா?

எனக்குத் தெரிந்தவரையில் யாரும் இல்லை இல்லை இல்லை........

யாரும் நான் அவ்வாறுதான் மணமுடித்தேன் என்று சொன்னால் அது பொய் என்று கடவுள் சந்நிதானத்தில் அடித்துச் சத்தியம் செய்ய நான் தயார். அவர்கள் தயாரா?


8 comments:

Civil Service Exam World said...
This comment has been removed by the author.
Civil Service Exam World said...
This comment has been removed by the author.
சுப.தமிழினியன் said...

நான் திருமனம் செய்து கொள்ளும் போது, உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புகிறேன், கட்டாயம் கலந்து கொள்ளுங்கள், என் திருமனம், மோதிரம் மாற்றிக்கொள்ளாமலோ, தாலி கட்டாமலோதான் நடைபெறும். என் திருமனத்தை பதிவு செய்வதைத் தவிர வேறு எந்த புடலங்காய் சமச்சாரமும் தேவையில் லை என்று நினைப்பவன் நான்.

சுப.தமிழினியன் said...

word verification எடுத்துவிடவும்.

தனியன் said...

சுப.தமிழினியன் said...
நான் திருமனம் செய்து கொள்ளும் போது, உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புகிறேன், கட்டாயம் கலந்து கொள்ளுங்கள், என் திருமனம், மோதிரம் மாற்றிக்கொள்ளாமலோ, தாலி கட்டாமலோதான் நடைபெறும். என் திருமனத்தை பதிவு செய்வதைத் தவிர வேறு எந்த புடலங்காய் சமச்சாரமும் தேவையில் லை என்று நினைப்பவன் நான்.//

தம்பி நீ கலியாணம் செய்யவில்லையா.. சவால் விடு விடு .கலியாணம் என்று ஒன்று வரும் வரை தாராளமாக விடலாம் பிறகு நீஉம் வேட்டி கட்டி மணமேடையில் ஐயர் முன் உட்கார வேண்டியதுதான்...

தனியன் said...

தம்பி தமிழினியன் அதையும் தாண்டி நீ அப்பா அம்மா உறவினர்களின் முன்னிலையில் (இரு வீட்டார் முன்னிலையிலும்) நிச்சயமாக பெருமைகொள்ளும் முதல் ஆளாக நான்தான் இருப்பேன்!

வாழ்த்துக்கள்

Anonymous said...

"க்ளிக்" செய்து படியுங்கள்.
1.
ம‌த‌ம்மாற்ற‌ம் செய்ய தில்லுமுல்லு மொள்ள‌மாரித்த‌ன‌ம்.

…………………………………..
ஒரு இறைவேதம் என்பது எல்லோராலும் படித்து பின்பற்றத்தக்க வேதமாக இருக்கவேண்டும். அதன் ஒவ்வொரு வசனங்களையும் எங்கு வேண்டுமானாலும் படிக்கலாம் – யாரிடம் வேண்டுமானாலும் படித்துக்காட்டலாம், எப்பொழுது வேண்டுமானாலும் அதன் கருத்துக்களை விளக்கலாம் என்பது ஒரு இறை வேதத்தினுடைய பொது நியதி. இது எல்லா வேதங்களுக்கும் இருக்கப்படவேண்டிய ஒரு பொதுவான தகுதியும் கூட.

புனித பைபிளில் வரும் இந்தவசனங்களை எவராவது தன் குடும்பத்தோடு – குறிப்பாகத் தன் தாய், தந்தை, மகன், மகள் மற்றும் அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரோடும் சேர்ந்து படிக்க இயலுமா? சிந்தித்துப் பாருங்கள் சகோதரர்களே! விபச்சார சகோதரிகள் பற்றி சொல்லப்படும் இந்த கதையின் வர்ணனையின் மூலம் கர்த்தர் இவ்வுலக மக்களுக்கு என்ன சொல்ல வருகின்றார்? இதனால் என்ன பயன்?

"க்ளிக்" செய்து படியுங்கள்.
2.
வேசிகள் அடங்காத‌ காமத்துடன்

....................................................
ஓரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு...??? ** ஒரு கிறிஸ்தவராவது செயல்படுத்துவாரா? ** இதை உபதேசித்த இயேசுவாவது செயல்படுத்திக் காட்டினாரா? என்றால் அதுவும் கிடையாது என்று பைபிளே சான்று பகர்கின்றது.

"க்ளிக்" செய்து படியுங்கள்.
3.கிறிஸ்துவ போலிமாயைக்கு சவால்?

tamildigitalcinema said...

உங்களது பதிவுகள் இன்னும் ஏராளமான வாசர்களை சென்றடைய http://writzy.com/tamil/ ல் உங்கள் பதிவுகளை இணையுங்கள்...